Tamil Language Thirukkural

Thirukkural -0028

Written by Thamizh Mozhi .com

Athigaram 3

Kural- 0028

அதிகாரம்/Chapter/Adhigaram: நீத்தார் பெருமை/The Greatness of Ascetics/Neeththaar Perumai 3
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1

Kural in Tamil:

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

Kural in English Transliteration:

Niraimozhi Maandhar Perumai Nilaththu
Maraimozhi Kaatti Vitum.

Couplet Explanation:

The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world.

மு.வ உரை:

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

கலைஞர் உரை:

சான்றோர்களின்   பெருமையை, இந்த உலகில்  அழியாமல்  நிலைத்து
நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

Rev. Dr. G.U.Pope Translations:

The might of men whose word is never vain,
The ‘Secret word’ shall to the earth proclaim.

Yogi Shuddhananda Translations:

Full-worded men by what they say,
Their greatness to the world display.

Easy reading Thirukurral  by Parimelazhagar :

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.”

நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து

மறை மொழி காட்டி விடும்.

தொடரமைப்பு:

 நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து மறை மொழி காட்டி விடும்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) நிறைமொழிமாந்தர் பெருமை = நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை;
நிலத்து மறைமொழி  காட்டி விடும் = நிலவுலகத்தின் கண் (அவர் ஆணையாகச் சொல்லிய) மந்திரங்களே (கண்கூடாகக்) காட்டும்.
பரிமேலழகர் உரை விளக்கம்:
‘நிறைமொழி’ என்பது அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தேவிடும் மொழி.
‘காட்டுதல்’, பயனான் உணர்த்துதல்.

About the author

Thamizh Mozhi .com

Leave a Comment