Tamil Language Thirukkural

Thirukkural -0024

Written by Thamizh Mozhi .com

Athigaram 3

Kural- 0024

அதிகாரம்/Chapter/Adhigaram: நீத்தார் பெருமை/The Greatness of Ascetics/Neeththaar Perumai 3
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1

Kural in Tamil:

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

Kural in English Transliteration:

Uranennum Thottiyaan Oraindhum Kaappaan
Varanennum Vaippirkor Viththu.

Couplet Explanation:

He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.

மு.வ உரை:

அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

சாலமன் பாப்பையா உரை:

மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.

கலைஞர் உரை:

உறுதியென்ற  அங்குசம்   கொண்டு,   ஐம்பொறிகளையும்   அடக்கிக்
காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

Rev. Dr. G.U.Pope Translations:

He, who with firmness’ curb the five restrains,
Is seed for soil of yonder happy plains.

Yogi Shuddhananda Translations:

With hook of firmness to restrain
The senses five, is heaven to gain.

Easy reading Thirukurral  by Parimelazhagar :

“உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.” 

உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து. 

தொடரமைப்பு:  உரன் என்னும் தோட்டியான், ஓர் ஐந்தும் காப்பான், வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து.

பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் = திண்மை என்னும் தோட்டியால், (பொறிகளாகிய யானை) ஐந்தனையும் (தத்தம் புலன்கள்மேற் செல்லாமற்) காப்பான்;
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து = (எல்லா நிலத்தினும்) மிக்கது என்று சொல்லப்படும் வீட்டுநிலத்திற்கு ஓர் வித்தாம்.
பரிமேலழகர் உரை விளக்கம்:

இஃது ஏகதேச உருவகம்.

‘திண்மை’ ஈண்டு அறிவின் மேற்று.
அந்நிலத்திற் சென்று முளைத்தலின் ‘வித்து’ என்றார்; ஈண்டுப்பிறந்து இறந்து வரும் மகன்அல்லன் என்பதாம்.

About the author

Thamizh Mozhi .com

Leave a Comment