Tamil Language Thirukkural

Thirukkural -0017

Written by Thamizh Mozhi .com

Athigaram 2

Kural- 0017

அதிகாரம்/Chapter/Adhigaram: வான்சிறப்பு/The Blessing of Rain/Vaansirappu 2
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1

Kural in Tamil:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

Kural in English Transliteration:

Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili
Thaannalkaa Thaaki Vitin.

Couplet Explanation:

Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).

மு.வ உரை:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்
சாலமன் பாப்பையா உரை:
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்
கலைஞர் உரை:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்
Rev. Dr. G.U.Pope Translations:
If clouds restrain their gifts and grant no rain,
The treasures fail in ocean’s wide domain.
Yogi Shuddhananda Translations:
The ocean’s wealth will waste away,
Except the cloud its stores repay.
Easy reading Thirukurral  by Parimelazhagar :
நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின்
                                            நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
                                              தான் நல்காது ஆகி விடின்.

தொடரமைப்பு:நெடு கடலும் தன் நீர்மை குன்றும், எழிலி தான் நல்காது ஆகி விடின்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் = அளவில்லாத கடலும் தன்னியல்பு குறையும்;
எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின் = மேகந்தான் (அதனைக்) குறைத்து (அதன்கட்) பெய்யாது விடுமாயின்.
பரிமேலழகர் விளக்கம்:
உம்மை சிறப்பும்மை.
தன்னியல்பு குறைதாலாவது, நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணிமுதலாயின படாமையும் ஆம்.
ஈண்டுக் ‘குறைத்தல்’ என்றது முகத்தலை. அது “கடல் குறை படுத்தநீர் கல் குறைபடவெறிந்து” (பரிபாடல்-20) என்பதானானும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம்.
இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.

About the author

Thamizh Mozhi .com

Leave a Comment