Tamil Language

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 10

Written by Dr. Avvai N Arul

ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர்

பகுத்தறிவு பரப்பும் பாங்கு!

காலத்திற்கேற்பக் கருத்துகள் மாறும் .மக்கள் சிந்தனையும் மாற்றங்களை வரவேற்கும் .எடுத்துச் சொல்வோரின் எழுச்சியும் – புதுமையும் பெருவெற்றி பெறும் .தடையாக நின்ற நெடுங்குன்றங்கள் கால ஓட்டத்தில் தவிடு பொடியாகும் .

உலகில் எங்கும் வரலாறு இப்படித்தான் வடிவம் பெறுகிறது .பழையன கழித்தலும் – புதியன புகுத்தலும் என்று தொடரைச் சிறிது மாற்றலாம் .

மாற்றம் என்பது தான் என்றும் மாறாது என்ற மார்க்சீயத் தொடர் நாடறிந்தது .தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா ! என்ற பாடல் நினைவுக்கு வருகிறது .முத்தமிழறிஞர் கலைஞரின் எழுத்தோவியங்கள் அனைத்தும் கால மாற்றத்தையும் – கருத்துப் புதுமையும் எடுத்து மொழிந்தன .அந்த வகையில் பூம்புகார் நாடகப் புதுமைகள் மாபெரும் தமிழுணர்வை எழுப்பின .

மூதறிஞர் வ சுப மாணிக்கம் இந்தப் புதுமைகளைக் கண்டு வியந்து நயந்து போற்றிய திறனாய்வைத்தான் நேற்றும் இன்றும் நாம் கட்டுரையாகக் கண்டுணர்கிறோம் .கலைப்புதுமை ,அரசியற்புதுமை ,மக்களின் பொதுமை ,பொங்கும் உணர்ச்சி வெள்ளம் ,இனவெழுச்சியாய்த் துள்ளும் உள்ளம் பூம்புகார் நாடகத்தில் அருவிப்பெருக்காக அமைகின்றன .

சிலப்பதிகாரக் கதைக் கோப்பு நீண்டது .அரசர் ,ஆயர் ,வேட்டுவர் ,வணிகர் , புலவர் ,துறவர் ,பார்ப்பார் ,உழவர் ,அலுவலர் ,சமயர் ,கொல்லர் ,படைஞர் ,அயலவர் ,தூதுவர் எனப்பல்வேறு நிலையினர் இடம் பெற்றுள்ளனர் .

கிரேக்கக் கிழவனை இடம்பெறச் செய்து யவன வணிகப் பெருமையையும் காட்டிய திறமை கலைஞருக்கே வாய்த்த கருத்து வளமாகும் . கிழவக் கிரேக்கன் அத்தொகையைக் கொடுக்க முன் வரவே, மாதவி திடுக்கிடுகின்றாள்.

வசந்தமாலை கிழவனுக்குக் கொடுக்க இசையவில்லை. சித்திராபதி கிழவன் பக்கம். சொன்னபடி மாலைக்குப் பணங்கொடுக்கிறேன்; சொன்ன சொல்லைக் காப்பாற்றுங்கள் என்று கிழவன் துடிதுடிக்கின்றான். இப்போராட்டத்தில் அங்கிருந்த கண்ணகி * ஐயோ பாவம் மாதவி… அத்தான், நீங்கள் தான் போய் அவளைக் காப்பாற்றுங்களேன்’ என்று கோவலனை ஏவுகின்றாள்.கிழவனை இளங்கிளி மணப்பது தமிழ்நாட்டுப் பண்பு அன்று என்ற தமிழ் நாகரிகத்தை நிலைநாட்டு வதற்காகவே கோவலன் உரியபொன் கொடுத்து மாதவியின் மாலையை வாங்கிக் கொண்டு கண்ணகியொடு தன் வீடு செல்கின்றான் .

மாதவி தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்று வசந்தமாலையைக் கோவலனிடம் தூதாக அனுப்ப, அவன் வரமுடியாது என்று மறுக்க, அந்நிலையில், கண்ணகி கோவலனிடம் ‘நீங்களே மாதவியிடம் நேரிற் சென்று நிலையை விளக்கிச் சொல்லுங்கள்.அவள் மனத்துக்கு ஓர் அமைதி ஏற்படும்’ என்று போகச் செய்கின்றாள் , மாதவி இல்லம் சென்ற கோவலன் அங்கேயே இருந்த கோவலன் ஆனான். ‘என் அக்காளாகிய கண்ணகி வாடிக் கொண்டிருப்பாள்.

எத்தனை முறை சொல்லுகிறேன், போய்ப் பார்த்து வாருங்கள்’ என்று மாதவி கட்டாயப்படுத்தக் கோவலன் ஒவ்வொருகால் வேண்டா வெறுப்பாகக் கண்ணகியைப் பார்க்க வருவான்.இளங்கோ இவ்வாறு கதை கூறவில்லை – என்பது வெளிப்படை. கிழவன் என்ற ஒரு பாத்திரமோ, கண்ணகியும் மாதவி நடனம் பார்த்தலோ, மாதவி வீட்டுக்குக் கண்ணகியே கோவலனைப் போகச் சொல்லுதலோ இல்லவே இல்லை.

எனினும் கலைஞர் இவ்வாறு அறவே கதை மாற்றம் செய்வதன் நோக்கம் யாது? நாட்டில் நிகழும் கிழவன் மணத்தைத் தடுக்க வேண்டும் என்ற சீர்திருத்தக் கொள்கையுடையவர் கலைஞர். அதற்குக் கிரேக்கப் பாத்திரம் வாய்ப்பாயிற்று. கோவலனை நல்ல வணிகனாக, நல்ல அறிஞனாக, நல்ல முயற்சியாளனாக இளங்கோ படைக்கவில்லை.

கண்ட இளம் பெண்கள் ஆசைப்படும் அழகனாகவும், அவனும் அப்பெண்களைக் காமுற்றுத் திரியும் ஊர்க் காமுகனாகவும், சிலம்பைக்கூட விற்க அறியா வணிகப் பேதையாகவும், எந்நிகழ்ச்சியிலும் தக்க மறு மொழி கூறமாட்டா வாய்மூடியாகவும் இளங்கோ சிலம்பில் கோவலன் இருக்கின்றான்.இப்படைப்பு கலைஞருக்குப் பொருத்தமாகப் பட்டிலது. கண்ணகியின் கணவன் என்ற பார்வையில் கோவலனை ஆற்றல் படைத்த வனாகக் காட்டுகின்றார். மாதவியைக் கோவலன் விழைய வில்லை. ஒவ்வா மணத்தைத் தடுக்கவே, அதுவும் கண்ணகி சொல்ல மாதவியின் மாலையை வாங்கினான்.

மீண்டும் அவள் சொல்ல மாதவி வீடு சென்றான். முடிவில் மாதவி இறந்தால் நாட்டியக்கலை தமிழகத்தில் இறந்து ஒழியும் என்ற உணர்ச்சியால் அவளை அணைத்தான். கலைஞர் நாடகத்தில் கோவலன் தொடக்க முதலே குற்றமற்றவன் என்று காண்கின்றோம்.அதுபோல் இளங்கோ வடித்த கண்ணகியும் கலைஞர் படைக்கும் கண்ணகியும் வேறு. மண் மகள் அறியா வண்ணச் சீறடியளாக, கலையறியாப் பேதையாக, யாதும், அறியா ஏழையாகக் காப்பியக் கண்ணகி இருக்கின்றாள். நாடகக் கண்ணகியோ, கோவலனை எதிர்பார்த்துக் கடலலையில் குதித்து விளையாடுவதையும், மாதவி நடனம் பார்க்கச் செல்வதையும், கோவலனுக்கு அறிவுரை கூறுவதையும், ஊடலாடி உரையாடல் நிகழ்த்துவதையும் அமைதிப் பெண்ணாக இன்றி இருபதாம் நூற்றாண்டுப் பாரதியின் புதுமைப் பெண்ணாக இலங்கு வதையும் காண்கின்றோம்.

கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் காவலன் உள்ளம் கவர்ந்தன என்றுதன் ஊடல் உள்ளம் உள்கரந் தொளித்துத் தலைநோய் வருத்தம் தன்மே லிட்டுக் குலமுதல் தேவி கூடாது ஏக ‘ என்ற சிலப்பதிகாரத்தில் பாண்டியன் தேவி அரசவையில் ஊ டிக்கொண்டு போனாள் என்று அறிகின்றோம்.

இது நாகரிகமாகப் படவில்லை. பொற்கொல்லன் தேவியின் சிலம்பை எவ்வாறு எவ்விடத்துத் திருடினான் என்று இக்காப்பியத்துக் குறிப்பில்லை.மேலும் ஒரு பொற்கொல்லன் திருடினான் என்பதற்காக அவ்வினத்தில் ஆயிரம் பொற்கொல்லரைக் கொன்று களவேள்வி செய்ததும் அரசுமுறையாகச் செங்கோலாகத் தோன்ற வில்லை.

தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையை ஆளும் பாண்டியன் தமிழ்ப்புலமையுடைய வனாகக் காட்டப்படவில்லை.இவற்றையெல்லாம் உள்ளிப் பார்த்தார் கலைஞர்.

பாண்டிமாதேவியின் ஒரு சிலம்பு பழுதுபட்டது எனவும், அதனைப் பொற்கொல்லனிடம் செம்மை செய்யக் கொண்டுசென்ற அதிகாரியே திருடினான் எனவும், சிலம்பு செப்பனிட்டு உடனே வாராமையால் தேவி ஊடல் கொண்டு அரசவை வர மறுத்தாள் எனவும் பாண்டியன் நெடுஞ்செழியன் சிலம் பையும் மனைவியின் ஊடலையும் பொருட்படுத்தாது கல்வியின் பெருமை காட்ட ‘உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும்’ என்ற தமிழ்க் கவிதையை ஓலையில் எழுதிக் கொண்டிருந்தான் எனவும் கலைஞர் கதையோட்டத்தை முற்றும் மாற்றியமைப்பர், மாற்றியமைத்துப் பொற்கொல்லினத்தை வழிவழி வந்த பழியினின்று காத்துப் போற்றினார்.மனைவியின் ஊடலாயினும் அது வீட்டளவில் இருக்க வேண்டுமேயன்றி நாட்டவையில் தோன்றக் கூடாது என்று அடக்கம் காட்டினார்.

புற நானூற்றில் நெடுஞ்செழியன் பாடியிருந்த ஒரே ஒரு செய்யுளை நினைவுகொண்டு வாய்ப்பாகப் பயன்படுத்தித் தன் மனைவி ஊடலிலும் தமிழ்ப்பாடல் இனிது என மொழிப் பற்று ஊட்டினார். செவிக்குத் தேனென இராகவன் புகழைத் திருத்திய கவிக்கு நாயகன்’ என்ற கம்பர் பாராட்டு நம் முதலமைச்சர் கலைஞர்க்கும் பொருந்துவதாகும்.பகுத்தறிவுக் கதை இரு நூலிலும் மதுரை எரிபடுகின்றது.

சிலம்புக் காப்பியத்தில் நெருப்புவானவன் தோன்றி மதுரையைக் கொளுத்துகின்றான். சிலம்பு நாடகத்தில் கணவன் கொலைப்பட்டான் என்பது கேட்டுக் கண்ணகி மயங்கி ஓடும்போது குத்து விளக்குச் சாய்கிறது. குடிசை எரிகிறது. பெருங் குழப்பத்தில் அணைப்பவரின்றித் தீ பரவுகின்றது. சிலம்புக் காப்பியத்தில் தேவர்கள் கோவலனொடு சேரநாடு வந்து கண்ணகியை வானவூர்தியில் வானுலகு அழைத்துச் செல்கின்றனர்.

சிலம்பு நாடகமோ கணவன் வருவான் வருவான் என்று கண்கலங்கி வேங்கை மர நிழலில் கண்ணகி பலநாள் நின்று கொண்டிருந்தாள்; திடீரென ஒருநாள் அவளைக் காணவில்லை என்று நிறுத்துகின்றது. சிலம்புக் காப்பியம் கண்ணகி கோயிலுள் வழிபடு தெய்வமாகவும் பார்ப்பனத் தேவந்தி பெண் பூசாரி யாகவும் முடிக்கின்றது. சிலம்பு நாடகம் கற்புக் கண்ணகிக்குச் சிலைக்கல் இமயத்திலிருந்து கனகவிசயர் தலை மேல் தூக்கிவைத்துக் கொணர்ந்த மன்னனை வீரர்கள் “சேரன் செங்குட்டுவன் வாழ்க’ என்று வாழ்த்துவதோடு முடிகின்றது.

கண்ணகியின் எதிர்காலம் குறிக்கும் சாலினியும், பாண்டியன் பழம் பெருமை புகலும் மதுரைத் தெய்வமும், கோவலன் முன்னோனைக் கடலினின்று காப்பாற்றிய மணிமேகலைத் தெய்வக் கதையும், செங்குட்டுவன் வானத்துச் சிலம்புக் காட்சியும், கோவலன் பழவினைக் கதையும் இன்னபிற அப்பால் நிகழ்ச்சிகளும் கலைஞர் தம் நாடகச் சிலம்பில் கடுகளவும் புக இடங் கொடுக்கவில்லை. அவர் தம் பகுத்தறிவுக் கோட்பாடே இதற்கெல்லாம் காரணமாம்.அப்பால் நிகழ்ச்சிகளை ஒழித்து, தமிழ், தமிழ்ச்சால்பு, தமிழிலக்கியம், தமிழ்க்கலை.

தமிழர் மானம், தமிழின் ஒற்றுமை, தமிழகப் பெருமை என்ற தமிழ்மைக்கு எல்லா இடத்தும் முதன்மை கொடுத்துப் பற்றினைத் தூண்டியுள்ளார் என்பதனை நான் அழுத்தமாகச் சொல்ல விரும்புகின்றேன். தமிழ் மயம்துறவு பூண்டாலும், இன்பத் தமிழகத்தை விட்டு எங்கும் போய்விடமாட்டேன்’ என்று இளங்கோ நாட்டுப் பற்றுக் காட்டுகின்றார்.’வாழ்க செந்தமிழர் தாயகம்* என்று முரசு முழங்குகின்றது.

தமிழ் கற்றுத் தமிழிலே எல்லாரோடும் பேசுகின்றான் கிரேக்கக் கிழவன், பழத்துக்குள் இருக்கின்ற சுளை போலச் சுவையேறும் செந்தமிழே’ என்று அமுதுற மொழிகின்றான் கோவலன். ‘எல்லாம் தமிழ்மறை தந்த பழக்கம்’ என அந்தணன் அறிந்து கொள்கின்றான். ‘தமிழரல்லவா தேவந்தி’ என்று கண்ணகி தமிழின மறத்தைப் பாராட்டுகின்றாள், ‘குழலையும் யாழையும் வெல்லுகின்ற குறளையும் வெல்லும் உன் குறுஞ் சிரிப்பு’ என்று குழந்தை மணிமேகலை சீராட்டப் பெறுகின்றாள்.’மானம் காக்கும் தமிழச்சி நீ மனம் தளரலாமா* என்று தேவந்தி ஆறுதல் கூறுகின்றாள்.’தாய்மேல் ஆணையாக — தமிழ்மேல் ஆணையாக-தாயகத்து மக்கள் மேல் ஆணையாகத் தீர்ப்புக் கூறுவீர்’ என்று துடிக்கின்றாள் கண்ணகி.

‘என் தமிழையல்லவா இகழ்ந்தார்கள்; முரசு தட்டுங்கள்; இமயத்தை முட்டுங்கள்; தமிழன்தோற்ற தில்லை’ என்று முழங்குகின்றான் செங்குட்டுவன். கலைஞர் கன்னித்தமிழ்க் கொள்கையர் ஆதலின், தமிழ்ப்பரப்பு இன்று கொள்ள வேண்டிய கோட்பாடு ஆதலின், இளங்கோ சிலம்பில் இல்லாத தமிழாட்சி கலைஞர் நாடக நூலில் வீற்றிருக்கக் காண்கின்றோம்.

புதிய சிலப்பதிகாரம்இளங்கோவின் சிலப்பதிகாரத்து வழி வந்தது தன் சிலப்பதிகாரம் என்று கலைஞர் ஒப்பியிருந்தாலும், கதை மாற்றத்தாலும், பாத்திரப் பண்பாலும், ஊழுக்கு இடங் கொடாமையாலும், தெய்வக்கூறு இன்மையாலும், பகுத்தறிவு நோக்காலும், சீர்திருத்தப் பாங்காலும் தமிழ்க்குறிக்கோளாலும் கலைஞர் சிலப்பதிகாரம் இருபதாம் நூற்றாண்டில் நல்லுரை நடையில் எழுந்த தனிமூலத் தன்மை வாய்ந்த புதுச்சிலப்பதிகாரமே என்பது என் துணிபு.

இளங்கோ சிலப்பதிகாரம், கலைஞர் சிலப்பதிகாரம், பாவேந்தர் பாரதிதாசன் கண்ணகி புரட்சிக் காப்பியம் என்ற மூன்றையும் ஒப்பீட்டுப் பொருளாக மேற்கொண்டு ஓர் ஆய்வாளன் திறன் தெரிந்தால் படைப்பிலக்கியங்கள் காலக்கண்ணோட்டத்தில் எத்தகைய மாற்றுருப்பெறுகின்றன என்று படைப்புக் கோட்பாடுகளை நெறிப்படுத்த முடியும், ஆசிரியனுடைய சமய, இன, அரசியற் கொள்கை வேறுபாடுகளால் பழங்கதைகள் எவ்வாறெல்லாம் புத்தம் புது வடிவெடுக்கின்றன என்ற அடிப்படைகளை வெளிப்படுத்த முடியும். இளங்கோவிற்கும் கலைஞர்க்கும் கொள்கை வேற்றுமைகள் பலப்பல.

அதனால் இருவர்தம் சிலப்பதிகாரம் மேலே காட்டியபடி வேறு படுதல் இயல்பே. கலைஞர்க்கும் பாவேந்தர்க்குமோ கொள்கை ஒற்றுமைகளே பல.அப்படியிருந்தும் இருவர் படைப்புக்களிலும் நுனித்தகு வேற்றுமைகள் உள. இவையெல்லாம் எதிர்கால ஆய்ஞருக்குத் தக்க புலமை விருந்துகள், நுழைபுலத்தார்க்குத் தக்க ஆய்வுக்களங்கள்.

கலைஞரின் சிலப்பதிகாரம் இன்னும் ஓரிரு புதிய சிலப்பதிகாரங்களுக்கு அடிகோலினாலும் அது வியப்புக்கு உரியதில்லை. கண்ணகி கற்பும் சிலம்பொலியும் தமிழாற்றலும் எத்துணை இலக்கியப் படைப்புக்கும் விரிந்து இடங்கொடுக்க வல்லது அல்லவா?’பழைய இதிகாசங்களைக் காட்டி விதியை நிலை நிறுத்த எண்ணாதீர்! இதோ நான் படைக்கின்றேன் புதிய இதிகாசம்’ என்பது கலைஞர் படைத்த சிலப்பதிகாரத்தில் இளங்கோ கூறும் வாய்மொழி, பாத்திரம் புலவனின் படைப்பு அவன் எண்ணப்படி பாத்திரம் நினைக்கும், சொல்லும், செய்யும். கலைஞரின் நாடகத்தில் இளங்கோவும் ஒரு பாத்திரம் ஆகிவிட்டார்.

பாத்திர இளங்கோ கலைஞரின் சிந்தனைகளை வெளியிடுகின்றார் தன் கருத்துச் சொல்லியாக யாரையும் பாத்திரப்படுத்துவது தானே அன்று முதல் இன்று வரை புலவனுக்கு உள்ள தனியுரிமை. இவ்வுரிமை கலைஞர்க்கு மட்டும் விலக்காகுமா ?இளங்கிளி மணப்பது தமிழ்நாட்டுப் பண்பு அன்று என்ற தமிழ் நாகரிகத்தை நிலைநாட்டு வதற்காகவே கோவலன் உரியபொன் கொடுத்து மாதவியின் மாலையை வாங்கிக் கொண்டு கண்ணகியொடு தன் வீடு செல்கின்றான் மாதவி தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்று வசந்தமாலையைக் கோவலனிடம் தூதாக அனுப்ப, அவன் வரமுடியாது என்று மறுக்க, அந்நிலையில், கண்ணகி கோவலனிடம் ‘நீங்களே மாதவியிடம் நேரிற் சென்று நிலையை விளக்கிச் சொல்லுங்கள்.அவள் மனத்துக்கு ஓர் அமைதி ஏற்படும்’ என்று போகச் செய்கின்றாள் , மாதவி இல்லம் சென்ற கோவலன் அங்கேயே இருந்த கோவலன் ஆனான்.

‘என் அக்காளாகிய கண்ணகி வாடிக் கொண்டிருப்பாள். எத்தனை முறை சொல்லுகிறேன், போய்ப் பார்த்து வாருங்கள்’ என்று மாதவி கட்டாயப்படுத்தக் கோவலன் ஒவ்வொருகால் வேண்டா வெறுப்பாகக் கண்ணகியைப் பார்க்க வருவான்.இளங்கோ இவ்வாறு கதை கூறவில்லை – என்பது வெளிப்படை. கிழவன் என்ற ஒரு பாத்திரமோ, கண்ணகியும் மாதவி நடனம் பார்த்தலோ, மாதவி வீட்டுக்குக் கண்ணகியே கோவலனைப் போகச் சொல்லுதலோ இல்லவே இல்லை. எனினும் கலைஞர் இவ்வாறு அறவே கதை மாற்றம் செய்வதன் நோக்கம் யாது? நாட்டில் நிகழும் கிழவன் மணத்தைத் தடுக்க வேண்டும் என்ற சீர்திருத்தக் கொள்கையுடையவர் கலைஞர்.

அதற்குக் கிரேக்கப் பாத்திரம் வாய்ப்பாயிற்று.கோவலனை நல்ல வணிகனாக, நல்ல அறிஞனாக, நல்ல முயற்சியாளனாக இளங்கோ படைக்கவில்லை. கண்ட இளம் பெண்கள் ஆசைப்படும் அழகனாகவும், அவனும் அப்பெண்களைக் காமுற்றுத் திரியும் ஊர்க் காமுகனாகவும், சிலம்பைக்கூட விற்க அறியா வணிகப் பேதையாகவும், எந்நிகழ்ச்சியிலும் தக்க மறு மொழி கூறமாட்டா வாய்மூடியாகவும் இளங்கோ சிலம்பில் கோவலன் இருக்கின்றான்.இப்படைப்பு கலைஞருக்குப் பொருத்தமாகப் பட்டிலது.

கண்ணகியின் கணவன் என்ற பார்வையில் கோவலனை ஆற்றல் படைத்தவனாகக் காட்டுகின்றார். மாதவியைக் கோவலன் விழைய வில்லை. ஒவ்வா மணத்தைத் தடுக்கவே, அதுவும் கண்ணகி சொல்ல மாதவியின் மாலையை வாங்கினான். மீண்டும் அவள் சொல்ல மாதவி வீடு சென்றான். முடிவில் மாதவி இறந்தால் நாட்டியக்கலை தமிழகத்தில் இறந்து ஒழியும் என்ற உணர்ச்சியால் அவளை அணைத்தான். கலைஞர் நாடகத்தில் கோவலன் தொடக்க முதலே குற்றமற்றவன் என்று காண்கின்றோம்.அதுபோல் இளங்கோ வடித்த கண்ணகியும் கலைஞர் படைக்கும் கண்ணகியும் வேறு. மண் மகள் அறியா வண்ணச் சீறடியளாக, கலையறியாப் பேதையாக, யாதும், அறியா ஏழையாகக் காப்பியக் கண்ணகி இருக்கின்றாள்.

நாடகக் கண்ணகியோ, கோவலனை எதிர்பார்த்துக் கடலலையில் குதித்து விளையாடுவதையும், மாதவி நடனம் பார்க்கச் செல்வதையும், கோவலனுக்கு அறிவுரை கூறுவதையும், ஊடலாடி உரையாடல் நிகழ்த்து வதையும் அமைதிப் பெண்ணாக இன்றி இருபதாம் நூற்றாண்டுப் பாரதியின் புதுமைப் பெண்ணாக இலங்கு வதையும் காண்கின்றோம்.

கதைத் திருத்தம் கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் காவலன் உள்ளம் கவர்ந்தன என்றுதன் ஊடல் உள்ளம் உள்கரந் தொளித்துத் தலைநோய் வருத்தம் தன்மே லிட்டுக் குலமுதல் தேவி கூடாது ஏக ‘ என்ற சிலப்பதிகாரத்தில் பாண்டியன் தேவி அரசவையில் ஊ டிக்கொண்டு போனாள் என்று அறிகின்றோம். இது நாகரிகமாகப் படவில்லை. பொற்கொல்லன் தேவியின் சிலம்பை எவ்வாறு எவ்விடத்துத் திருடினான் என்று இக்காப்பியத்துக் குறிப்பில்லை.மேலும் ஒரு பொற்கொல்லன் திருடினான் என்பதற்காக அவ்வினத்தில் ஆயிரம் பொற்கொல்லரைக் கொன்று களவேள்வி செய்ததும் அரசுமுறையாகச் செங்கோலாகத் தோன்றவில்லை.

தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையை ஆளும் பாண்டியன் தமிழ்ப்புலமையுடைய வனாகக் காட்டப்படவில்லை.இவற்றையெல்லாம் உள்ளிப் பார்த்தார் கலைஞர். பாண்டிமாதேவியின் ஒரு சிலம்பு பழுதுபட்டது எனவும், அதனைப் பொற்கொல்லனிடம் செம்மை செய்யக் கொண்டுசென்ற அதிகாரியே திருடினான் எனவும், சிலம்பு செப்பனிட்டு உடனே வாராமையால் தேவி ஊடல் கொண்டு அரசவை வர மறுத்தாள் எனவும் பாண்டியன் நெடுஞ்செழியன் சிலம்பையும் மனைவியின் ஊடலையும் பொருட்படுத்தாது கல்வியின் பெருமை காட்ட ‘உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும்’ என்ற தமிழ்க் கவிதையை ஓலையில் எழுதிக் கொண்டிருந்தான் எனவும் கலைஞர் கதையோட்டத்தை முற்றும் மாற்றியமைப்பர், மாற்றியமைத்துப் பொற்கொல்லினத்தை வழிவழி வந்த பழியினின்று காத்துப் போற்றினார்.

மனைவியின் ஊடலாயினும் அது வீட்டளவில் இருக்க வேண்டுமேயன்றி நாட்டவையில் தோன்றக் கூடாது என்று அடக்கம் காட்டினார். புற நானூற்றில் நெடுஞ்செழியன் பாடியிருந்த ஒரே ஒரு செய்யுளை நினைவுகொண்டு வாய்ப்பாகப் பயன்படுத்தித் தன் மனைவி ஊடலிலும் தமிழ்ப்பாடல் இனிது என மொழிப் பற்று ஊட்டினார். செவிக்குத் தேனென இராகவன் புகழைத் திருத்திய கவிக்கு நாயகன்’ என்ற கம்பர் பாராட்டு நம் முதலமைச்சர் கலைஞர்க்கும் பொருந்துவதாகும்.பகுத்தறிவுக் கதை இரு நூலிலும் மதுரை எரிபடுகின்றது. சிலம்புக் காப்பியத்தில் நெருப்புவானவன் தோன்றி மதுரையைக் கொளுத்துகின்றான். சிலம்பு நாடகத்தில் கணவன் கொலைப் பட்டான் என்பது கேட்டுக் கண்ணகி மயங்கி ஓடும்போது குத்து விளக்குச் சாய்கிறது. குடிசை எரிகிறது.

பெருங் குழப்பத்தில் அணைப்பவரின்றித் தீ பரவுகின்றது. சிலம்புக் காப்பியத்தில் தேவர்கள் கோவலனொடு சேரநாடு வந்து கண்ணகியை வானவூர்தியில் வானுலகு அழைத்துச் செல்கின்றனர்.சிலம்பு நாடகமோ கணவன் வருவான் வருவான் என்று கண்கலங்கி வேங்கை மர நிழலில் கண்ணகி பலநாள் நின்று கொண்டிருந்தாள்; திடீரென ஒருநாள் அவளைக் காணவில்லை என்று நிறுத்து கின்றது.

சிலம்புக் காப்பியம் கண்ணகி கோயிலுள் வழிபடு தெய்வமாகவும் பார்ப்பனத் தேவந்தி பெண் பூசாரி யாகவும் முடிக்கின்றது. சிலம்பு நாடகம் கற்புக் கண்ணகிக்குச் சிலைக்கல் இமயத்திலிருந்து கனகவிசயர் தலை மேல் தூக்கிவைத்துக் கொணர்ந்த மன்னனை வீரர்கள் “சேரன் செங்குட்டுவன் வாழ்க’ என்று வாழ்த்துவதோடு முடிகின்றது.கண்ணகியின் எதிர்காலம் குறிக்கும் சாலினியும், பாண்டியன் பழம் பெருமை புகலும் மதுரைத் தெய்வமும், கோவலன் முன்னோனைக் கடலினின்று காப்பாற்றிய மணிமேகலைத் தெய்வக் கதையும், செங்குட்டுவன் வானத்துச் சிலம்புக் காட்சியும், கோவலன் பழவினைக் கதையும் இன்னபிற அப்பால் நிகழ்ச்சிகளும் கலைஞர் தம் நாடகச் சிலம்பில் கடுகளவும் புக இடங் கொடுக்கவில்லை.

அவர் தம் பகுத்தறிவுக் கோட்பாடே இதற்கெல்லாம் காரணமாம்.அப்பால் நிகழ்ச்சிகளை ஒழித்து, தமிழ், தமிழ்ச்சால்பு, தமிழிலக்கியம், தமிழ்க்கலை. தமிழர் மானம், தமிழின் ஒற்றுமை, தமிழகப் பெருமை என்ற தமிழ்மைக்கு எல்லா இடத்தும் முதன்மை கொடுத்துப் பற்றினைத் தூண்டியுள்ளார் என்பதனை நான் அழுத்தமாகச் சொல்ல விரும்புகின்றேன். தமிழ் மயம்துறவு பூண்டாலும், இன்பத் தமிழகத்தை விட்டு எங்கும் போய்விடமாட்டேன்’ என்று இளங்கோ நாட்டுப் பற்றுக் காட்டுகின்றார்.’வாழ்க செந்தமிழர் தாயகம்* என்று முரசு முழங்குகின்றது. தமிழ் கற்றுத் தமிழிலே எல்லாரோடும் பேசுகின்றான் கிரேக்கக் கிழவன், பழத் துக்குள் இருக்கின்ற சுளை போலச் சுவையேறும் செந்தமிழே’ என்று அமுதுற மொழிகின்றான் கோவலன். ‘எல்லாம் தமிழ்மறை தந்த பழக்கம்’ என அந்தணன் அறிந்து கொள்கின்றான்.

‘தமிழரல்லவா தேவந்தி’ என்று கண்ணகி தமிழின மறத்தைப் பாராட்டுகின்றாள், ‘குழலையும் யாழையும் வெல்லுகின்ற குறளையும் வெல்லும் உன் குறுஞ் சிரிப்பு’ என்று குழந்தை மணிமேகலை சீராட்டப் பெறுகின்றாள். ‘மானம் காக்கும் தமிழச்சி நீ மனம் தளரலாமா* என்று தேவந்தி ஆறுதல் கூறுகின்றாள்.’தாய்மேல் ஆணையாக — தமிழ்மேல் ஆணையாக-தாயகத்து மக்கள் மேல் ஆணையாகத் தீர்ப்புக் கூறுவீர்’ என்று துடிக்கின்றாள் கண்ணகி.

‘என் தமிழையல்லவா இகழ்ந்தார்கள்; முரசு தட்டுங்கள்; இமயத்தை முட்டுங்கள்; தமிழன்தோற்ற தில்லை’ என்று முழங்குகின்றான் செங்குட்டுவன். கலைஞர் கன்னித்தமிழ்க் கொள்கையர் ஆதலின், தமிழ்ப்பரப்பு இன்று கொள்ள வேண்டிய கோட்பாடு ஆதலின், இளங்கோ சிலம்பில் இல்லாத தமிழாட்சி கலைஞர் நாடக நூலில் வீற்றிருக்கக் காண்கின்றோம்.

புதிய சிலப்பதிகாரம்இளங்கோவின் சிலப்பதிகாரத்து வழி வந்தது தன் சிலப்பதிகாரம் என்று கலைஞர் ஒப்பியிருந்தாலும், கதை மாற்றத்தாலும், பாத்திரப் பண்பாலும், ஊழுக்கு இடங் கொடாமையாலும், தெய்வக்கூறு இன்மையாலும், பகுத் தறிவு நோக்காலும், சீர் திருத்தப் பாங்காலும் தமிழ்க் குறிக்கோளாலும் கலைஞர் சிலப்பதிகாரம் இருபதாம் நூற்றாண்டில் நல்லுரை நடையில் எழுந்த தனிமூலத் தன்மை வாய்ந்த புதுச் சிலப்பதிகாரமே என்பது என் துணிபு.’பழைய இதிகாசங்களைக் காட்டி விதியை நிலை நிறுத்த எண்ணாதீர்! இதோ நான் படைக்கின்றேன் புதிய இதிகாசம்’ என்பது கலைஞர் படைத்த சிலப்பதிகாரத்தில் இளங்கோ கூறும் வாய்மொழி, பாத்திரம் புலவனின் படைப்பு அவன் எண்ணப்படி பாத்திரம் நினைக்கும், சொல்லும், செய்யும். கலைஞரின் நாடகத்தில் இளங்கோவும் ஒரு பாத்திரம் ஆகிவிட்டார்.

பாத்திர இளங்கோ கலைஞரின் சிந்தனைகளை வெளியிடுகின்றார் தன் கருத்துச் சொல்லியாக யாரையும் பாத்திரப்படுத்துவது தானே அன்று முதல் இன்று வரை புலவனுக்கு உள்ள தனியுரிமை. இவ்வுரிமை கலைஞர்க்கு மட்டும் விலக்காகுமா?செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம் ….ஒளவை நடராசன்மேனாள் துணைவேந்தர்பகுத்தறிவு பரப்பகாலத்தகருத்துகள் வேற்கும் .

எடுத்துச் சொல்வோரின் எழுச்சியும் – புதுமையும் பெருவெற்றி பெறும் .தடையாக நின்ற நெடுங்குன்றங்கள் கால ஓட்டத்தில் தவிடு பொடியாகும் .உலகில் எங்கும் வரலாறு இப்படித்தான் வடிவம் பெறுகிறது .பழையன கழித்தலும் – புதியன புகுத்தலும் என்று தொடரைச் சிறிது மாற்றலாம் .மாற்றம் என்பதுதான் என்மாறாது என்ற மார்க்சீயத் தொடர் நாடறிந்தது .தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா ! என்ற பாடல் நினைவுக்கு வருகிறது .முத்தமிழறிஞர் கலைஞரின் எழுத்தோவியங்கள் அனைத்தும் கால மாற்றத்தையும் – கருத்துப் புதுமையும் எடுத்து மொழிந்தன .

அந்த வகையில் பூம்புகார் நாடகப் புதுமைகள் மாபெரும் தமிழுணர்வை எழுப்பின .மூதறிஞர் வ சுப மாணிக்கம் இந்தப் புதுமைகளைக் கண்டு வியந்து நயந்து போற்றிய திறனாய்வைத்தான் நேற்றும் இன்றும் நாம் கட்டுரையாகக் கண்டுணர்கிறோம் .கலைப்புதுமை ,அரசியற்புதுமை ,மக்களின் பொதுமை ,பொங்கும் உணர்ச்சி வெள்ளம் ,இனவெழுச்சியாய்த் துள்ளும் உள்ளம் பூம்புகார் நாடகத்தில் அருவிப்பெருக்காக அமைகின்றன .

சிலப்பதிகாரக் கதைக் கோப்பு நீண்டது .அரசர் ,ஆயர் ,வேட்டுவர் ,வணிகர் , புலவர் ,துறவர் ,பார்ப்பார் ,உழவர் ,அலுவலர் ,சமயர் ,கொல்லர் ,படைஞர் ,அயலவர் ,தூதுவர் எனப்பல்வேறு நிலையினர் இடம் பெற்றுள்ளனர் .கிரேக்கக் கிழவனை இடம்பெறச் செய்து யவன வணிகப் பெருமையையும் காட்டிய திறமை கலைஞருக்கே வாய்த்த கருத்து வளமாகும் . கிழவக் கிரேக்கன் அத்தொகையைக் கொடுக்க முன் வரவே, மாதவி திடுக்கிடுகின்றாள்.

வசந்தமாலை கிழவனுக்குக் கொடுக்க இசையவில்லை. சித்திராபதி கிழவன் பக்கம். சொன்னபடி மாலைக்குப் பணங்கொடுக்கிறேன்; சொன்ன சொல்லைக் காப்பாற்றுங்கள் என்று கிழவன் துடிதுடிக்கின்றான். இப்போராட்டத்தில் அங்கிருந்த கண்ணகி * ஐயோ பாவம் மாதவி… அத்தான், நீங்கள் தான் போய் அவளைக் காப்பாற்றுங்களேன்’ என்று கோவலனை ஏவுகின்றாள்.கிழவனை இளங்கிளி மணப்பது தமிழ்நாட்டுப் பண்பு அன்று என்ற தமிழ் நாகரிகத்தை நிலைநாட்டு வதற்காகவே கோவலன் உரியபொன் கொடுத்து மாதவியின் மாலையை வாங்கிக் கொண்டு கண்ணகியொடு தன் வீடு செல்கின்றான் மாதவி தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்று வசந்தமாலையைக் கோவலனிடம் தூதாக அனுப்ப, அவன் வரமுடியாது என்று மறுக்க, அந்நிலையில், கண்ணகி கோவலனிடம் ‘நீங்களே மாதவியிடம் நேரிற் சென்று நிலையை விளக்கிச் சொல்லுங்கள்.

அவள் மனத்துக்கு ஓர் அமைதி ஏற்படும்’ என்று போகச் செய்கின்றாள் , மாதவி இல்லம் சென்ற கோவலன் அங்கேயே இருந்த கோவலன் ஆனான். ‘என் அக்காளாகிய கண்ணகி வாடிக் கொண்டிருப்பாள். எத்தனை முறை சொல்லுகிறேன், போய்ப் பார்த்து வாருங்கள்’ என்று மாதவி கட்டாயப்படுத்தக் கோவலன் ஒவ்வொருகால் வேண்டா வெறுப்பாகக் கண்ணகியைப் பார்க்க வருவான்.இளங்கோ இவ்வாறு கதை கூறவில்லை – என்பது வெளிப்படை. கிழவன் என்ற ஒரு பாத்திரமோ, கண்ணகியும் மாதவி நடனம் பார்த்தலோ, மாதவி வீட்டுக்குக் கண்ணகியே கோவலனைப் போகச் சொல்லு தலோ இல்லவே இல்லை. எனினும் கலைஞர் இவ்வாறு அறவே கதை மாற்றம் செய்வதன் நோக்கம் யாது? நாட்டில் நிகழும் கிழவன் மணத்தைத் தடுக்க வேண்டும் என்ற சீர்திருத்தக் கொள்கையுடையவர் கலைஞர். அதற்குக் கிரேக்கப் பாத்திரம் வாய்ப்பாயிற்று. கோவலனை நல்ல வணிகனாக, நல்ல அறிஞனாக, நல்ல முயற்சியாளனாக இளங்கோ படைக்கவில்லை. கண்ட இளம் பெண்கள் ஆசைப் படும் அழகனாகவும், அவனும் அப்பெண்களைக் காமுற்றுத் திரியும் ஊர்க் காமுகனாகவும், சிலம்பைக்கூட விற்க அறியா வணிகப் பேதையாகவும், எந்நிகழ்ச்சியிலும் தக்க மறு மொழி கூறமாட்டா வாய்மூடியாகவும் இளங்கோ சிலம்பில் கோவலன் இருக்கின்றான்.இப்படைப்பு கலைஞருக்குப் பொருத்தமாகப் பட்டிலது. கண்ணகியின் கணவன் என்ற பார்வையில் கோவலனை ஆற்றல் படைத்த வனாகக் காட்டுகின்றார். மாதவியைக் கோவலன் விழைய வில்லை. ஒவ்வா மணத்தைத் தடுக்கவே, அதுவும் கண்ணகி சொல்ல மாதவியின் மாலையை வாங்கினான். மீண்டும் அவள் சொல்ல மாதவி வீடு சென்றான். முடிவில் மாதவி இறந்தால் நாட்டியக்கலை தமிழகத்தில் இறந்து ஒழியும் என்ற உணர்ச்சியால் அவளை அணைத்தான். கலைஞர் நாடகத்தில் கோவலன் தொடக்க முதலே குற்றமற்றவன் என்று காண்கின்றோம்.அதுபோல் இளங்கோ வடித்த கண்ணகியும் கலைஞர் படைக்கும் கண்ணகியும் வேறு. மண் மகள் அறியா வண்ணச் சீறடியளாக, கலையறியாப் பேதையாக, யாதும், அறியா ஏழையாகக் காப்பியக் கண்ணகி இருக்கின்றாள். நாடகக் கண்ணகியோ, கோவலனை எதிர்பார்த்துக் கடலலையில் குதித்து விளையாடுவதையும், மாதவி நடனம் பார்க்கச் செல்வதையும், கோவலனுக்கு அறிவுரை கூறுவதையும், ஊடலாடி உரையாடல் நிகழ்த்து வதையும் அமைதிப் பெண்ணாக இன்றி இருபதாம் நூற்றாண்டுப் பாரதியின் புதுமைப் பெண்ணாக இலங்கு வதையும் காண்கின்றோம்.

கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் காவலன் உள்ளம் கவர்ந்தன என்றுதன் ஊடல் உள்ளம் உள்கரந் தொளித்துத் தலைநோய் வருத்தம் தன்மே லிட்டுக் குலமுதல் தேவி கூடாது ஏக ‘ என்ற சிலப்பதிகாரத்தில் பாண்டியன் தேவி அரசவையில் ஊ டிக்கொண்டு போனாள் என்று அறிகின்றோம். இது நாகரிகமாகப் படவில்லை. பொற்கொல்லன் தேவியின் சிலம்பை எவ்வாறு எவ்விடத்துத் திருடினான் என்று இக்காப்பியத்துக் குறிப்பில்லை.மேலும் ஒரு பொற்கொல்லன் திருடினான் என்பதற்காக அவ்வினத்தில் ஆயிரம் பொற்கொல்லரைக் கொன்று களவேள்வி செய்ததும் அரசுமுறையாகச் செங்கோலாகத் தோன்ற வில்லை. தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையை ஆளும் பாண்டியன் தமிழ்ப்புலமையுடைய வனாகக் காட்டப்படவில்லை.

இவற்றையெல்லாம் உள்ளிப் பார்த்தார் கலைஞர். பாண்டிமாதேவியின் ஒரு சிலம்பு பழுதுபட்டது எனவும், அதனைப் பொற்கொல்லனிடம் செம்மை செய்யக் கொண்டுசென்ற அதிகாரியே திருடினான் எனவும், சிலம்பு செப்பனிட்டு உடனே வாராமையால் தேவி ஊடல் கொண்டு அரசவை வர மறுத்தாள் எனவும் பாண்டியன் நெடுஞ்செழியன் சிலம் பையும் மனைவியின் ஊடலையும் பொருட்படுத்தாது கல்வியின் பெருமை காட்ட ‘உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும்’ என்ற தமிழ்க் கவிதையை ஓலையில் எழுதிக் கொண்டிருந்தான் எனவும் கலைஞர் கதையோட்டத்தை முற்றும் மாற்றியமைப்பர், மாற்றியமைத்துப் பொற்கொல்லினத்தை வழிவழி வந்த பழியினின்று காத்துப் போற்றினார்.மனைவியின் ஊடலாயினும் அது வீட்டளவில் இருக்க வேண்டுமேயன்றி நாட்டவையில் தோன்றக் கூடாது என்று அடக்கம் காட்டினார்.

புற நானூற்றில் நெடுஞ்செழியன் பாடியிருந்த ஒரே ஒரு செய்யுளை நினைவுகொண்டு வாய்ப்பாகப் பயன்படுத்தித் தன் மனைவி ஊடலிலும் தமிழ்ப்பாடல் இனிது என மொழிப் பற்று ஊட்டினார். செவிக்குத் தேனென இராகவன் புகழைத் திருத்திய கவிக்கு நாயகன்’ என்ற கம்பர் பாராட்டு நம் முதலமைச்சர் கலைஞர்க்கும் பொருந்துவதாகும்.பகுத்தறிவுக் கதை இரு நூலிலும் மதுரை எரிபடுகின்றது. சிலம்புக் காப்பி யத்தில் நெருப்புவானவன் தோன்றி மதுரையைக் கொளுத்துகின்றான். சிலம்பு நாடகத்தில் கணவன் கொலைப் பட்டான் என்பது கேட்டுக் கண்ணகி மயங்கி ஓடும்போது குத்து விளக்குச் சாய்கிறது.

குடிசை எரிகிறது. பெருங் குழப்பத்தில் அணைப்பவரின்றித் தீ பரவுகின்றது. சிலம்புக் காப்பியத்தில் தேவர்கள் கோவலனொடு சேரநாடு வந்து கண்ணகியை வானவூர்தியில் வானுலகு அழைத்துச் செல்கின்றனர்.சிலம்பு நாடகமோ கணவன் வருவான் வருவான் என்று கண்கலங்கி வேங்கை மர நிழலில் கண்ணகி பலநாள் நின்று கொண்டிருந்தாள்; திடீரென ஒருநாள் அவளைக் காணவில்லை என்று நிறுத்து கின்றது. சிலம்புக் காப்பியம் கண்ணகி கோயிலுள் வழிபடு தெய்வமாகவும் பார்ப்பனத் தேவந்தி பெண் பூசாரி யாகவும் முடிக்கின்றது.

சிலம்பு நாடகம் கற்புக் கண்ணகிக்குச் சிலைக்கல் இமயத்திலிருந்து கனகவிசயர் தலை மேல் தூக்கிவைத்துக் கொணர்ந்த மன்னனை வீரர்கள் “சேரன் செங்குட்டுவன் வாழ்க’ என்று வாழ்த்துவதோடு முடிகின்றது.கண்ணகியின் எதிர்காலம் குறிக்கும் சாலினியும், பாண்டியன் பழம் பெருமை புகலும் மதுரைத் தெய்வமும், கோவலன் முன்னோனைக் கடலினின்று காப்பாற்றிய மணிமேகலைத் தெய்வக் கதையும், செங்குட்டுவன் வானத்துச் சிலம்புக் காட்சியும், கோவலன் பழவினைக் கதையும் இன்னபிற அப்பால் நிகழ்ச்சிகளும் கலைஞர் தம் நாடகச் சிலம்பில் கடுகளவும் புக இடங் கொடுக்கவில்லை.

அவர் தம் பகுத்தறிவுக் கோட்பாடே இதற்கெல்லாம் காரணமாம்.அப்பால் நிகழ்ச்சிகளை ஒழித்து, தமிழ், தமிழ்ச்சால்பு, தமிழிலக்கியம், தமிழ்க்கலை. தமிழர் மானம், தமிழின் ஒற்றுமை, தமிழகப் பெருமை என்ற தமிழ்மைக்கு எல்லா இடத்தும் முதன்மை கொடுத்துப் பற்றினைத் தூண்டியுள்ளார் என்பதனை நான் அழுத்தமாகச் சொல்ல விரும்புகின்றேன். தமிழ் மயம்துறவு பூண்டாலும், இன்பத் தமிழகத்தை விட்டு எங்கும் போய்விடமாட்டேன்’ என்று இளங்கோ நாட்டுப் பற்றுக் காட்டுகின்றார்.’வாழ்க செந்தமிழர் தாயகம்* என்று முரசு முழங்குகின்றது. தமிழ் கற்றுத் தமிழிலே எல்லாரோடும் பேசுகின்றான் கிரேக்கக் கிழவன், பழத் துக்குள் இருக்கின்ற சுளை போலச் சுவையேறும் செந்தமிழே’ என்று அமுதுற மொழிகின்றான் கோவலன்.

‘எல்லாம் தமிழ்மறை தந்த பழக்கம்’ என அந்தணன் அறிந்து கொள்கின்றான். ‘தமிழரல்லவா தேவந்தி’ என்று கண்ணகி தமிழின மறத்தைப் பாராட்டுகின்றாள், ‘குழலையும் யாழையும் வெல்லுகின்ற குறளையும் வெல்லும் உன் குறுஞ் சிரிப்பு’ என்று குழந்தை மணிமேகலை சீராட்டப் பெறு கின்றாள்.’மானம் காக்கும் தமிழச்சி நீ மனம் தளரலாமா* என்று தேவந்தி ஆறுதல் கூறுகின்றாள்.’தாய்மேல் ஆணை யாக — தமிழ்மேல் ஆணையாக-தாயகத்து மக்கள் மேல் ஆணையாகத் தீர்ப்புக் கூறுவீர்’ என்று துடிக்கின்றாள் கண்ணகி. ‘என் தமிழையல்லவா இகழ்ந்தார்கள்; முரசு தட்டுங்கள்; இமயத்தை முட்டுங்கள்; தமிழன்தோற்ற தில்லை’ என்று முழங்குகின்றான் செங்குட்டுவன். கலைஞர் கன்னித்தமிழ்க் கொள்கையர் ஆதலின், தமிழ்ப்பரப்பு இன்று கொள்ள வேண்டிய கோட்பாடு ஆதலின், இளங்கோ சிலம்பில் இல்லாத தமிழாட்சி கலைஞர் நாடக நூலில் வீற்றிருக்கக் காண்கின்றோம்.

புதிய சிலப்பதிகாரம்இளங்கோவின் சிலப்பதிகாரத்து வழி வந்தது தன் சிலப்பதிகாரம் என்று கலைஞர் ஒப்பியிருந்தாலும், கதை மாற்றத்தாலும், பாத்திரப் பண்பாலும், ஊழுக்கு இடங் கொடாமையாலும், தெய்வக்கூறு இன்மையாலும், பகுத் தறிவு நோக்காலும், சீர் திருத்தப் பாங்காலும் தமிழ்க் குறிக்கோளாலும் கலைஞர் சிலப்பதிகாரம் இருபதாம் நூற்றாண்டில் நல்லுரை நடையில் எழுந்த தனிமூலத் தன்மை வாய்ந்த புதுச் சிலப்பதிகாரமே என்பது என் துணிபு.இளங்கோ சிலப்பதிகாரம், கலைஞர் சிலப்பதிகாரம், பாவேந்தர் பாரதிதாசன் கண்ணகி புரட்சிக் காப்பியம் என்ற மூன்றையும் ஒப்பீட்டுப் பொருளாக மேற்கொண்டு ஓர் ஆய்வாளன் திறன் தெரிந்தால் படைப்பிலக்கியங் கள் காலக்கண்ணோட்டத்தில் எத்தகைய மாற்றுருப்பெறு கின்றன என்று படைப்புக் கோட்பாடுகளை நெறிப்படுத்த முடியும், ஆசிரியனுடைய சமய, இன, அரசியற் கொள்கை வேறுபாடுகளால் பழங்கதைகள் எவ்வா றெல்லாம் புத்தம் புது வடிவெடுக்கின்றன என்ற அடிப் படைகளை வெளிப்படுத்த முடியும். இளங்கோவிற்கும் கலைஞர்க்கும் கொள்கை வேற்றுமைகள் பலப்பல. அதனால் இருவர்தம் சிலப்பதிகாரம் மேலே காட்டியபடி வேறு படுதல் இயல்பே. கலைஞர்க்கும் பாவேந்தர்க்குமோ கொள்கை ஒற்றுமைகளே பல.

அப்படியிருந்தும் இருவர் படைப்புக்களிலும் நுனித்தகு வேற்றுமைகள் உள. இவையெல்லாம் எதிர்கால ஆய்ஞருக்குத் தக்க புலமை விருந்து கள், நுழைபுலத்தார்க்குத் தக்க ஆய்வுக்களங்கள். கலை ஞரின் சிலப்பதிகாரம் இன்னும் ஓரிருபுதிய சிலப்பதிகாரங்களுக்கு அடிகோலினாலும் அது வியப்புக்கு உரியதில்லை. கண்ணகி கற்பும் சிலம்பொலியும் தமிழாற்றலும் எத்துணை இலக்கியப் படைப்புக்கும் விரிந்து இடங்கொடுக்க வல்லது அல்லவா?’பழைய இதிகாசங்களைக் காட்டி விதியை நிலை நிறுத்த எண்ணாதீர்! இதோ நான் படைக்கின்றேன் புதிய இதிகாசம்’ என்பது கலைஞர் படைத்த சிலப்பதிகாரத்தில் இளங்கோ கூறும் வாய்மொழி, பாத்திரம் புலவனின் படைப்பு அவன் எண்ணப்படி பாத்திரம் நினைக்கும், சொல்லும், செய்யும். கலைஞரின் நாடகத்தில் இளங்கோவும் ஒரு பாத்திரம் ஆகிவிட்டார்.

பாத்திர இளங்கோ கலைஞரின் சிந்தனைகளை வெளியிடுகின்றார் தன் கருத்துச் சொல்லியாக யாரையும் பாத்திரப்படுத்துவது தானே அன்று முதல் இன்று வரை புலவனுக்கு உள்ள தனியுரிமை. இவ்வுரிமை கலைஞர்க்கு மட்டும் விலக்காகுமா ?இளங்கிளி மணப்பது தமிழ்நாட்டுப் பண்பு அன்று என்ற தமிழ் நாகரிகத்தை நிலைநாட்டு வதற்காகவே கோவலன் உரியபொன் கொடுத்து மாதவியின் மாலையை வாங்கிக் கொண்டு கண்ணகியொடு தன் வீடு செல்கின்றான் மாதவி தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்று வசந்தமாலையைக் கோவலனிடம் தூதாக அனுப்ப, அவன் வரமுடியாது என்று மறுக்க, அந்நிலையில், கண்ணகி கோவலனிடம் ‘நீங்களே மாதவியிடம் நேரிற் சென்று நிலையை விளக்கிச் சொல்லுங்கள்.அவள் மனத்துக்கு ஓர் அமைதி ஏற்படும்’ என்று போகச் செய்கின்றாள் , மாதவி இல்லம் சென்ற கோவலன் அங்கேயே இருந்த கோவலன் ஆனான். ‘என் அக்காளாகிய கண்ணகி வாடிக் கொண்டிருப்பாள். எத்தனை முறை சொல்லுகிறேன், போய்ப் பார்த்து வாருங்கள்’ என்று மாதவி கட்டாயப்படுத்தக் கோவலன் ஒவ்வொருகால் வேண்டா வெறுப்பாகக் கண்ணகியைப் பார்க்க வருவான்.

இளங்கோ இவ்வாறு கதை கூறவில்லை – என்பது வெளிப்படை. கிழவன் என்ற ஒரு பாத்திரமோ, கண்ணகியும் மாதவி நடனம் பார்த்தலோ, மாதவி வீட்டுக்குக் கண்ணகியே கோவலனைப் போகச் சொல்லு தலோ இல்லவே இல்லை. எனினும் கலைஞர் இவ்வாறு அறவே கதை மாற்றம் செய்வதன் நோக்கம் யாது? நாட்டில் நிகழும் கிழவன் மணத்தைத் தடுக்க வேண்டும் என்ற சீர்திருத்தக் கொள்கையுடையவர் கலைஞர். அதற்குக் கிரேக்கப் பாத்திரம் வாய்ப்பாயிற்று.கோவலனை நல்ல வணிகனாக, நல்ல அறிஞனாக, நல்ல முயற்சியாளனாக இளங்கோ படைக்கவில்லை. கண்ட இளம் பெண்கள் ஆசைப் படும் அழகனாகவும், அவனும் அப்பெண்களைக் காமுற்றுத் திரியும் ஊர்க் காமுகனாகவும், சிலம்பைக்கூட விற்க அறியா வணிகப் பேதையாகவும், எந்நிகழ்ச்சியிலும் தக்க மறு மொழி கூறமாட்டா வாய்மூடியாகவும் இளங்கோ சிலம்பில் கோவலன் இருக்கின்றான்.

இப்படைப்பு கலைஞருக்குப் பொருத்தமாகப் பட்டிலது. கண்ணகியின் கணவன் என்ற பார்வையில் கோவலனை ஆற்றல் படைத்த வனாகக் காட்டுகின்றார். மாதவியைக் கோவலன் விழைய வில்லை. ஒவ்வா மணத்தைத் தடுக்கவே, அதுவும் கண்ணகி சொல்ல மாதவியின் மாலையை வாங்கினான்.

மீண்டும் அவள் சொல்ல மாதவி வீடு சென்றான். முடிவில் மாதவி இறந்தால் நாட்டியக்கலை தமிழகத்தில் இறந்து ஒழியும் என்ற உணர்ச்சியால் அவளை அணைத்தான். கலைஞர் நாடகத்தில் கோவலன் தொடக்க முதலே குற்றமற்றவன் என்று காண்கின்றோம்.அதுபோல் இளங்கோ வடித்த கண்ணகியும் கலைஞர் படைக்கும் கண்ணகியும் வேறு. மண் மகள் அறியா வண்ணச் சீறடியளாக, கலையறியாப் பேதையாக, யாதும், அறியா ஏழையாகக் காப்பியக் கண்ணகி இருக்கின்றாள். நாடகக் கண்ணகியோ, கோவலனை எதிர்பார்த்துக் கடலலையில் குதித்து விளையாடுவதையும், மாதவி நடனம் பார்க்கச் செல்வதையும், கோவலனுக்கு அறிவுரை கூறுவதையும், ஊடலாடி உரையாடல் நிகழ்த்து வதையும் அமைதிப் பெண்ணாக இன்றி இருபதாம் நூற்றாண்டுப் பாரதியின் புதுமைப் பெண்ணாக இலங்கு வதையும் காண்கின்றோம்.கதைத் திருத்தம் கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் காவலன் உள்ளம் கவர்ந்தன என்றுதன் ஊடல் உள்ளம் உள்கரந் தொளித்துத் தலைநோய் வருத்தம் தன்மே லிட்டுக் குலமுதல் தேவி கூடாது ஏக ‘ என்ற சிலப்பதிகாரத்தில் பாண்டியன் தேவி அரசவையில் ஊ டிக்கொண்டு போனாள் என்று அறிகின்றோம். இது நாகரிகமாகப் படவில்லை.

பொற்கொல்லன் தேவியின் சிலம்பை எவ்வாறு எவ்விடத்துத் திருடினான் என்று இக்காப்பியத்துக் குறிப்பில்லை.மேலும் ஒரு பொற்கொல்லன் திருடினான் என்பதற்காக அவ்வினத்தில் ஆயிரம் பொற்கொல்லரைக் கொன்று களவேள்வி செய்ததும் அரசுமுறையாகச் செங்கோலாகத் தோன்ற வில்லை. தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையை ஆளும் பாண்டியன் தமிழ்ப்புலமையுடைய வனாகக் காட்டப்படவில்லை.இவற்றையெல்லாம் உள்ளிப் பார்த்தார் கலைஞர். பாண்டிமாதேவியின் ஒரு சிலம்பு பழுதுபட்டது எனவும், அதனைப் பொற்கொல்லனிடம் செம்மை செய்யக் கொண்டுசென்ற அதிகாரியே திருடினான் எனவும், சிலம்பு செப்பனிட்டு உடனே வாராமையால் தேவி ஊடல் கொண்டு அரசவை வர மறுத்தாள் எனவும் பாண்டியன் நெடுஞ்செழியன் சிலம் பையும் மனைவியின் ஊடலையும் பொருட்படுத்தாது கல்வியின் பெருமை காட்ட ‘உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும்’ என்ற தமிழ்க் கவிதையை ஓலையில் எழுதிக் கொண்டிருந்தான் எனவும் கலைஞர் கதையோட்டத்தை முற்றும் மாற்றியமைப்பர், மாற்றியமைத்துப் பொற்கொல்லினத்தை வழிவழி வந்த பழியினின்று காத்துப் போற்றினார்.மனைவியின் ஊடலாயினும் அது வீட்டளவில் இருக்க வேண்டுமேயன்றி நாட்டவையில் தோன்றக் கூடாது என்று அடக்கம் காட்டினார்.

புற நானூற்றில் நெடுஞ்செழியன் பாடியிருந்த ஒரே ஒரு செய்யுளை நினைவுகொண்டு வாய்ப்பாகப் பயன்படுத்தித் தன் மனைவி ஊடலிலும் தமிழ்ப்பாடல் இனிது என மொழிப் பற்று ஊட்டினார். செவிக்குத் தேனென இராகவன் புகழைத் திருத்திய கவிக்கு நாயகன்’ என்ற கம்பர் பாராட்டு நம் முதலமைச்சர் கலைஞர்க்கும் பொருந்துவதாகும்.பகுத்தறிவுக் கதை இரு நூலிலும் மதுரை எரிபடுகின்றது.

சிலம்புக் காப்பி யத்தில் நெருப்புவானவன் தோன்றி மதுரையைக் கொளுத்துகின்றான். சிலம்பு நாடகத்தில் கணவன் கொலைப் பட்டான் என்பது கேட்டுக் கண்ணகி மயங்கி ஓடும்போது குத்து விளக்குச் சாய்கிறது. குடிசை எரிகிறது. பெருங் குழப்பத்தில் அணைப்பவரின்றித் தீ பரவுகின்றது. சிலம்புக் காப்பியத்தில் தேவர்கள் கோவலனொடு சேரநாடு வந்து கண்ணகியை வானவூர்தியில் வானுலகு அழைத்துச் செல்கின்றனர்.சிலம்பு நாடகமோ கணவன் வருவான் வருவான் என்று கண்கலங்கி வேங்கை மர நிழலில் கண்ணகி பலநாள் நின்று கொண்டிருந்தாள்; திடீரென ஒருநாள் அவளைக் காணவில்லை என்று நிறுத்து கின்றது. சிலம்புக் காப்பியம் கண்ணகி கோயிலுள் வழிபடு தெய்வமாகவும் பார்ப்பனத் தேவந்தி பெண் பூசாரி யாகவும் முடிக்கின்றது. சிலம்பு நாடகம் கற்புக் கண்ணகிக்குச் சிலைக்கல் இமயத்திலிருந்து கனகவிசயர் தலை மேல் தூக்கிவைத்துக் கொணர்ந்த மன்னனை வீரர்கள் “சேரன் செங்குட்டுவன் வாழ்க’ என்று வாழ்த்துவதோடு முடிகின்றது.கண்ணகியின் எதிர்காலம் குறிக்கும் சாலினியும், பாண்டியன் பழம் பெருமை புகலும் மதுரைத் தெய்வமும், கோவலன் முன்னோனைக் கடலினின்று காப்பாற்றிய மணிமேகலைத் தெய்வக் கதையும், செங்குட்டுவன் வானத்துச் சிலம்புக் காட்சியும், கோவலன் பழவினைக் கதையும் இன்னபிற அப்பால் நிகழ்ச்சிகளும் கலைஞர் தம் நாடகச் சிலம்பில் கடுகளவும் புக இடங் கொடுக்கவில்லை.

அவர் தம் பகுத்தறிவுக் கோட்பாடே இதற்கெல்லாம் காரணமாம்.அப்பால் நிகழ்ச்சிகளை ஒழித்து, தமிழ், தமிழ்ச்சால்பு, தமிழிலக்கியம், தமிழ்க்கலை. தமிழர் மானம், தமிழின் ஒற்றுமை, தமிழகப் பெருமை என்ற தமிழ்மைக்கு எல்லா இடத்தும் முதன்மை கொடுத்துப் பற்றினைத் தூண்டியுள்ளார் என்பதனை நான் அழுத்தமாகச் சொல்ல விரும்புகின்றேன். தமிழ் மயம்துறவு பூண்டாலும், இன்பத் தமிழகத்தை விட்டு எங்கும் போய்விடமாட்டேன்’ என்று இளங்கோ நாட்டுப் பற்றுக் காட்டுகின்றார்.

‘வாழ்க செந்தமிழர் தாயகம்* என்று முரசு முழங்குகின்றது. தமிழ் கற்றுத் தமிழிலே எல்லாரோடும் பேசுகின்றான் கிரேக்கக் கிழவன், பழத் துக்குள் இருக்கின்ற சுளை போலச் சுவையேறும் செந்தமிழே’ என்று அமுதுற மொழிகின்றான் கோவலன். ‘எல்லாம் தமிழ்மறை தந்த பழக்கம்’ என அந்தணன் அறிந்து கொள்கின்றான். ‘தமிழரல்லவா தேவந்தி’ என்று கண்ணகி தமிழின மறத்தைப் பாராட்டுகின்றாள், ‘குழலையும் யாழையும் வெல்லுகின்ற குறளையும் வெல்லும் உன் குறுஞ் சிரிப்பு’ என்று குழந்தை மணிமேகலை சீராட்டப் பெறு கின்றாள். ‘மானம் காக்கும் தமிழச்சி நீ மனம் தளரலாமா* என்று தேவந்தி ஆறுதல் கூறுகின்றாள்.’தாய்மேல் ஆணை யாக — தமிழ்மேல் ஆணையாக-தாயகத்து மக்கள் மேல் ஆணையாகத் தீர்ப்புக் கூறுவீர்’ என்று துடிக்கின்றாள் கண்ணகி.

‘என் தமிழையல்லவா இகழ்ந்தார்கள்; முரசு தட்டுங்கள்; இமயத்தை முட்டுங்கள்; தமிழன்தோற்ற தில்லை’ என்று முழங்குகின்றான் செங்குட்டுவன். கலைஞர் கன்னித்தமிழ்க் கொள்கையர் ஆதலின், தமிழ்ப்பரப்பு இன்று கொள்ள வேண்டிய கோட்பாடு ஆதலின், இளங்கோ சிலம்பில் இல்லாத தமிழாட்சி கலைஞர் நாடக நூலில் வீற்றிருக்கக் காண்கின்றோம்.

புதிய சிலப்பதிகாரம் இளங்கோவின் சிலப்பதிகாரத்து வழி வந்தது தன் சிலப்பதிகாரம் என்று கலைஞர் ஒப்பியிருந்தாலும், கதை மாற்றத்தாலும், பாத்திரப் பண்பாலும், ஊழுக்கு இடங் கொடாமையாலும், தெய்வக்கூறு இன்மையாலும், பகுத் தறிவு நோக்காலும், சீர் திருத்தப் பாங்காலும் தமிழ்க் குறிக்கோளாலும் கலைஞர் சிலப்பதிகாரம் இருபதாம் நூற்றாண்டில் நல்லுரை நடையில் எழுந்த தனிமூலத் தன்மை வாய்ந்த புதுச் சிலப்பதிகாரமே என்பது என் துணிபு.’பழைய இதிகாசங்களைக் காட்டி விதியை நிலை நிறுத்த எண்ணாதீர்! இதோ நான் படைக்கின்றேன் புதிய இதிகாசம்’ என்பது கலைஞர் படைத்த சிலப்பதிகாரத்தில் இளங்கோ கூறும் வாய்மொழி, பாத்திரம் புலவனின் படைப்பு அவன் எண்ணப்படி பாத்திரம் நினைக்கும், சொல்லும், செய்யும். கலைஞரின் நாடகத்தில் இளங்கோவும் ஒரு பாத்திரம் ஆகிவிட்டார்.

பாத்திர இளங்கோ கலைஞரின் சிந்தனைகளை வெளியிடுகின்றார் தன் கருத்துச் சொல்லியாக யாரையும் பாத்திரப்படுத்துவது தானே அன்று முதல் இன்று வரை புலவனுக்கு உள்ள தனியுரிமை. இவ்வுரிமை கலைஞர்க்கு மட்டும் விலக்காகுமா?செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம் ….

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment