Personal Blogging

திருச்சியின் நினைவுகள்

Written by NaanaaS

திருச்சி தெப்பக்குளத்தில்
ஒரு ஸ்ட்டெரெய் ட் ட் ட் ட் டைவ்……..
அப்போது நான் திருச்சி சாரதாஸின் ஆஸ்தான சைன் போர்டு ஆர்ட்டிஸ்ட்டில் ஒருவன் plus part time ரிதம் கிட்டாரிஸ்ட் … தெப்பக்குளத்தின் வடமேற்கு கார்னரில் உள்ள ஜோதி மெஸ்ஸில் காலையில் 11 மணிக்கெல்லாம் breakfast முடிந்துவிடும் …அதற்குள்ளாக entry ஆயிட்டால் கிரெடிட் கார்டில்.. சாப்பிட்ட ஒரு great feel கிடைக்கும்…
( அந்த அனுபவம் ‘சொர்க்கம்’ என்பது ‘மாசக்கடைசி ‘ பேச்சிலர்களுக்கு சொல்லாமலே புரியும்.)
புதுக்கோட்டையிலிருந்து காலையில் சிங்கிள் டீ யுடன் புறப்பட்ட நானும் என் சிலோன் நண்பன் யோகாவும் தெப்பக்குளத்தின் வடமேற்கு மூலையில் உள்ள ‘சொர்க்கவாசலை ‘ நெருங்கும் குறுகிய வழியில் இடைஞ்சலாக ஒரு 50 – 60 பேர் தெப்பக்குளத்தின்
‘பச்சை’த் தண்ணிக்குள் எட்டிபார்த்து.. கையைக்காட்டி ….’இந்தா இந்த இடத்துல நுரை வருது…இன்னும் கொஞ்ச நேரத்துல பாடி மேலே மிதக்கும்….அப்போ தான் தெரிஞ்சிடும் …யாரு ..என்னான்னு…..
நான் பசியுடன் இருந்தாலும் நான் சுதாரித்த அந்த ஒரு செகண்ட் ….. ( இப்போதுகூட என் முழங்கை ஏரியாவில் வரை ஒரு சிலிர்ப்பை உணர வைக்கும் ) என் கிராமத்து நீச்சல் தைரியம் … நண்பனிடம் உடைகளை கொடுத்துவிட்டு கொஞ்சமும் யோசிக்காமல் நுரை வந்த இடத்தைக் குறிவைத்து ….. ஒரு ஸ்டெரெய் ட் ட் ட்… ட் டைவ்………
வருடக்கணக்கில் பராமரிக்கப்படாததால் தெப்பக்குளத்தில் தண்ணீர் 8 அடி ஆழத்துக்கு கீழே .. தண்ணீரும் சகதியும் லேயர் லேயராக ஜெல் மாதிரி இருந்தது.. அதில் லேசாக கையில் தட்டுப் பட்டது ஒரு சிறுவனின் உடல் …ஆடையின்றி ..வழுக்கும்…வெறும் அரைஞான் கயறு மட்டுமே … உள்ள அந்த உடலை மேலே தூக்க…
நான் மேலே வந்து ஒருமுறை மூச்செடுத்துக்கொண்டு… மேலே என்னாச்சு என்று கத்திய கும்பல் யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் …ஒவ்வொரு செகண்டையும் வேஸ்ட் பண்ணாமல் மீண்டும் உள்ளே சென்று அந்த அரைஞான் கயிறை யும் அவனின் தலைமுடியையும் பிடித்து இன்ச் இன்சாக அரை அடி வரை கயிறு அறுந்து விடாமல் விட்டு விட்டு இழுத்தேன் …
எடையில்லாமல் அவன் முழு உடம்பும் என் கையில்…இழுத்தவாறே கரை வரை நீந்தி கரையில் தூக்கி நின்றேன்….வேடிக்கை பார்த்த மக்கள் யாரும் கிட்டத்தில் வரலை.. என் நண்பண் யோகாவைத் தவிர…”நாராயணா ….அப்படியே அவனை ரெண்டு சுத்து சுத்து ” யார்ரா இந்த ஊர்ல என் இயற்பெயரை (!) பாசி அப்பிய கண் வழியே ‘அந்நியன்’ lookல் அந்தக் கூட்டத்தில் என் ஊரைச் சேர்ந்த என் அக்கா கிளாஸ்மேட் பெரியகருப்பன் செட்டியார்…
அவர் சொன்ன மாதிரி என்னால் முடிந்த அளவில் சுத்தினேன் …மூன்று சுத்து சுத்து சுத்திய பிறகும்…. நாலாவதாக தெப்பக்குளம் என்னை ஒரு சுற்றியது…மீண்டும் சுதாரித்தேன் ….இப்போது அந்த உடம்பில் இதுவரையில் இல்லாத அந்த லே.. சா.. ன… அ .. சை .. வு …
எனது உடம்பின் UPS ‘ஆன்’ ஆகி தெம்பாக்கிவிட்டது
அதன் பிறகு நெருங்கிய கூட்டத்தின் உதவியுடன் அவன் மூக்கிலும் வாயிலும் அடைத்திருந்த பச்சை பாசியை அகற்றி தெரிந்தவரை முதலுதவி செய்து படித்துறையில் கிடந்த அவன் உடையை அணிவித்து ஆட்டோவில் (என் மடியில் தலையை தாங்கி அவன் முகத்துக்கு முகம் அருகில் வைத்து அவனது லேசான மூச்சு இழுப்பு இருப்பதை அவ்வப்போது உறுதிசெய்து கொண்ட நிமிடங்கள் இந்த ஜென்மத்துக்கும் மறக்காது.) அருகிலிருந்த சிங்காரத்தோப்பு ………….. டிஸ்பென்சரிக்கு விரைந்தோம் …
சினிமாவில் வரும் சீன் மாதிரியே …Form ..பேஷன்ட் பெயர் இல்லாமல் எப்படி சார்…. என்ற டாக்டரின் எகத்தாளமான பேச்சில் எக்கச்சக்க வெறி ஏறி…வாக்குவாதம் ஒரு கட்டத்தில் ‘நீங்க இந்த பையனுக்கு first aid கொடுக்க முடியலைன்னா ….வேற hospital எங்கேயும் போகமாட்டேன் …நான் நேரா தினத்தந்தி பத்திரிகை ஆபிஸில் கொண்டு போய் போட்டுட்டு சாவுக்கு இந்த டாக்டர் தான் காரணம்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பேன்’ என்ற என் அதிரடி கத்தலில்…பயந்து FIRST AID மட்டும் அவசரகதியில் நடந்து முடிந்தது…அதே ஆட்டோவில் தில்லை நகரைக் கடந்து
G H க்குள் நுழைவாயிலில் நின்றிருந்த போலிஸ்காரரையும் துணைக்கு அழைத்து அவனது உடைமைகள் டிபன் பாக்ஸ் மற்றும் வாட்டர் ஜக் எல்லாவற்றையும் Duty Doctor ஒப்படைத்து விட்டு எனது “Moon Arts’ மற்றும் Sarathas விசிட்டிங் கார்டையும் கொடுத்துவிட்டு …பணம் வாங்க மறுத்த ஆட்டோகாரருக்கு நன்றி தெரிவித்து… அனுப்பிவிட்டு …. அதே ஜோதி மெஸ்ஸின் மதிய உணவுக்கு entry கொடுத்த போது விஷயம் பரவி …மெஸ் நண்பர்கள் மத்தியில் என் status எகிறியது. அப்போது தூர்தஷனும் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தினசரி மட்டும்தான் மீடியா என்பதால் அடுத்த தெரு தாண்டி விஷயம் பரவவில்லை …ஆனால் மறுநாள் அந்த விஷயம்… எப்படியோ எடிட் ஆகி இரண்டு வரியில் தந்தி பேப்பர் செய்தியாகியிருந்ததில் மீண்டும் ஒரு சுற்று பாராட்டு கிடைத்தது. முக்கியமாக, கொஞ்ச நாள் மெஸ்ஸில் இலை போடும் போதிலிருந்தே ஒரு ‘priority ‘ கிடைத்த வித்தியாசத்தை உணரமுடிந்தது .
..


மெஸ் பையனை அந்த ஓனர் வழக்கம்போல் ” எட்டி மிதிச்சேன்னு வையி … தெப்பக்குளத்துல போய் விழுவடா ” என்று திட்டும்போது “அதான் நாணா அண்ணே இருக்காருல்ல” என்னும் அளவுக்கே பேசப்பட்டு.. பின்னாளில் மறக்கப்பட்ட சம்பவம் 25 வருடங்கள் கழித்து கல்யாண்… கூவம் ஹீரோ …தினேஷ்… மேட்டரை status ல் போட … அப்போது திருச்சியில் இருந்த ஜெயா ராஜ்குமார் comment ல் நினைவூட்ட … ஒரு சிலரிடமே பகிர்ந்துகொண்டவை நண்பர் மங்களதாசன் தூண்டுதலில் நம் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு. .
அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து அந்த டாக்டரும் இன்னொருவரும் என் ‘மூன் ஆர்ட்ஸ் ‘ வாணப்பட்டறை அட்ரஸ் தேடி வந்து நன்றியை கண்ணீருடன் தெரிவித்த போது தான் அந்தப் பையன் வீட்டுக்கு ஒரே பையன் எனத் தெரியவந்தது. அப்போது தெப்பக்குளத்தில் குதித்த என்னால் இப்போது கூவத்தில் நினைத்துக் கூட பார்க்கமுடியாத செயல் தினேஷ் செய்த காரியத்திற்கு விருது
கொடுக்கப்பட வேண்டும்….அவர் தினகரனில் இருந்தாலும் அரசோ ..எதிர்க்கட்சியோ தினேஷை கூப்பிட்டு பெருமைப்படுத்த வேண்டாமோ…Anyway நாம் சொல்வோம் .. HATS OFF DINESH….( I will come and meet you )
அந்த தெப்பக்குளத்தின் வடக்குப்படித் துறை… (80’s ) அப்போது எழுதிய சாரதாஸ் ஹோர்டிங்ஸ்….நியூ இயர் கச்சேரியில் டான்சர் நண்பன் யோகாவுடன் ..

About the author

NaanaaS

Leave a Comment