Tamil Language

அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு-10

Written by Dr. Avvai N Arul


பெருமக்களே…
பாரதியின் குயில்பாட்டை மிக வனப்புற, அழகாக பெருமிதமாக, எல்லோரும் இப்படியெல்லாம் பாடிக் காட்ட முடியுமா குயில் பாட்டை…
எங்கள் கலைமாமணி சூரியபிரகாஷ் பாடிக் காட்டும் விதத்தை நாங்கள் கண்டு எல்லையில்லாத மகிழ்ச்சி அடைகின்றோம் என்று அனைவரும் போற்றிப் புகழ்ந்து வருகின்றனர்.
பெருமக்களே
பாரதியினுடைய மாபெரும் காப்பியமான குயில் பாட்டை படலம் படலமாக, மது சுரக்கும் வரிகளை மிக அழகாக, தன்னுடைய வசீகரமான குரலில் கலைமாமணி சூரியபிரகாஷ் பாடுவது நமக்கெல்லாம் பெருமை.
எனக்கென்ன பெரிய பெருமையென்றால்,
சூரியபிரகாஷ் அனைத்துப் பணிகளையும் செய்து விடுவார். நான் அங்கிங்கு அவர் பாடியதை அந்த வரிகளின் சில விளக்கங்களைத் தான் நான் சொல்ல முற்பட்டிருக்கின்றேன்.
குயில் பாட்டின் பெருமையுடன் ஒரு பெருமையை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சூரியபிரகாஷ் மட்டும் இந்தப் பணியை செய்யவில்லை. அவர் குடும்பமே ஒரு நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் போல் பணியாற்றி வருகின்றார்கள்.
அவர்களுடைய பெற்றோர்கள் அவருக்குக் கிடைத்த மாபெரும் மாணிக்கச் செல்வங்கள் ஆவார்கள். அவர்களுடைய தாயார் நாங்களெல்லாம் பள்ளியில் இணைந்து பயிலும் பொழுதே நாங்கள் பேசும் பேச்சுப் போட்டிகளிலும் அவ்வப்போது சொல்லுகின்ற சில கவிதைகளை போட்டி வளர்க்கின்ற கவிதைப் போட்டிகளுக்கெல்லாம் நடுவராக வந்த பெண்மணி அம்மையார் அவர்கள்.
அந்த அம்மையாருடைய ஊக்கமும், அவர்களுடைய ஆக்கமும் இன்றைக்கு கலைமாமணி சூரியபிரகாஷ் ஒரு ஆலமரம் போல் தழைத்து இருக்கின்றார். அவருடைய துணைவியார் ஒருபக்கம்; மறுபக்கம் அவருடைய மக்கட் செல்வங்கள்; துபாயிலிருந்து அவருடைய தங்கை நானும் என் பங்கை செய்கிறேன் என்று சொல்லி நாங்கள் பேசுவதையும் அவர் பாடுவதையும் மிக அழகாக இந்த யூடியூப் வாசகர்கள் எல்லாம் பார்ப்பதற்காக அதை மிக அழகாக எடிட் செய்து, அழகாக செய்து வருகின்ற அந்த அம்மையாரையும் துபாயில் இருக்கும் அவருடைய தங்கையையும் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நண்பர்களே!இப்படித்தான் குடும்பமாக செயல்பட மிக ஆர்வமாக பாரதியும் செயல்பட்டார்.தன்னுடைய மகளைப் பார்த்து ஒடுங்கி நிற்காதே, நிமிர்ந்த நன்னடை போடு, நேர்கொண்ட பார்வை பார் என்றெல்லாம் ஊக்கப்படுத்தி தனக்குப் பிறகு தன்னுடைய துணைவியார் தான் அவருடைய பாடல்களையெல்லாம் பதிப்பிக்க வேண்டும் செல்லம்மாள் பாரதியார்தான் அவருடைய நூல்களையெல்லாம் கவிதைகளை எல்லாம் நாம் பதிப்பிக்க வேண்டும் என்ற பேரவா கொண்டு செய்த பணி எல்லாம் நாம் பாராட்டுகின்றோம்.
குயில் பாட்டினுடைய இனிமை இந்தக் குயில் என்னெல்லாம் செய்தது பாருங்கள் குரங்கை காதலித்தது என்று கவிஞர் கோபத்தில் கனன்றார்.
பிறகு காளையைப் பார்த்துமா உனக்கு மயக்கம் என்று சென்ற வாரம் சொல்லித் துடித்தார்.
இந்த வாரம் காளையைப் பார்த்து அந்தக் குயில் எவ்வளவு அழகாக சொல்லிக் காட்டுகின்றது என்றால்
பெருமிதமானவனே,
மிக உயரமானவனே,
அழகானவனே
என்று அந்தக்காளையை வர்ணிக்கின்ற காட்சிகளைக் கண்டு கவிஞர் என்ன சொல்லுகிறார் என்பதைப் பாருங்கள் நண்பர்களே
குயில் தன் காதலி காளையிடம் தொடர்ந்து சொன்னது.
“மேன்மையானவரே
அனைத்துக் காளையிலும் நீர் தான் மிகுந்த தீரம் பெற்றவர்
. ஆஹா… என்ன நீளமான முகம், நிமிர்ந்த கொம்புகள், நிற்கும் உடலோ மென்மையிலே, வெண்மையிலே பஞ்சுப் பொதி போன்ற வடிவம். ஆனால் உடல் அனைவரையும் தோற்கடிக்கும் திடம். வாலோ வீரத்தின் விளைநிலம். நீ “மா” எனக் குரல் எழுப்பினால் வானத்து இடி முழக்கம். யாராவது ஒரு வெட்கமற்ற பறவை முதுகில் ஏறி அமர்ந்தால் வாலால் நீ அதனை சுழற்றி அடிக்கையில் உன் காதலின் நேர்மை நிமிர்ந்து நிற்கும்.
அதனாலேயே உன்னைக் கண்டு மயங்கி விட்டேன் எனக் கூறிய குயில் மேலும் தொடர்ந்தது.
கொழுத்த உடலும் விழுமிய உடல் வலிமையும் வீரம் மிகுந்த நடையும் என எந்தப் பெருமையும் இல்லாத சிறிய பறவையாக நான் பிறந்துவிட்டேன்.
இரவும் பகலும் இந்த சிறு வயிற்றுப் பிணிக்காக காட்டினைச் சுற்றிப் பறப்பேன். காற்றின் வேகத்தில் காலனைச் சந்தித்தால் சில மடமை கொண்ட மனிதர்களுக்கு உணவாகி விடுவேன்.
இந்தச் சிறிய குயில் குளத்தில் பிறந்து புலம்புகிறேன். என்செய்வேன்! நான் ஒரு பாவி அல்லவா? சேற்றிலே மலரும் செந்தாமரையும் சிறு மீன் இனச்சிப்பியின் கழிவு வயிற்றுக்குள் முத்தும் பிறப்பதை நீ கேள்விப்பட்டிருப்பாய் அல்லவா?
இந்த மோசமான குலத்தில் பிறந்தாலும் மனதின் ஆசையை மறக்க முடியுமா? மன்மத அம்பு இனம், குலம் பார்க்குமா என்ன? இனி இப்படி தர்க்கம் பேசிப்பேசி என்ன பயனும் இல்லை. அறிவின்மையாலோ முன்வினைப் பயனாலோ ஆண்களுக்குள்ளே காளையான உன்னைக் கண்டு கொண்டேன்.
நீயோ மக்களுக்கு பாரம் சுமந்து உணவு எடுத்துத் தருவதற்கு அவர்களுக்கு தெய்வமென உதவி செய்கிறாய்.
உனக்கு நான் உதவி செய்யத் துணிந்தேன். வேலை முடிந்து அலுப்பு தீர நீ அயர்ந்த நேரத்தில் உன் உறக்கத்திற்கு ஊறு விளைவிக்காது காதல் தேனிசை பாடுவேன்.
உன் முதுகில் ஏறி ஓரமாய்ப் படுத்துக் கொள்வேன் என்றெல்லாம் அந்த கானக் குயில் காதல் மொழி பேசுவதை நம் கவிஞர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
Such lovely breed?
are men of beauteous girth called by thy name and so extolled?


O blest of thy race! O Handsome with a long face blest!

With horns uprist and mould as cotton heap,a rolling hump on back,

thy tail doth keep stern watch,with bellow as thunder thou

swishest away upon thy back the birds impudent sway.

such charms as these,
I have,O loved in thee for long and pined.

I lack the majesty of thy mighty form I am a puny breed!

O misery,It has become a need to wing each day mid jungles,

tossed in the wind for paltry food.

O dangers that attend us besides,for men covet us most to make us into dish.


A sinner lost,the lotus is of the mire and mud,

the pearl so beautiful doth spring from the oyster shell.

so then if true love from the low born flows

how could it be rebuffed?is god who knows

the path of love ever swayed by thought of caste or creed?


Ah!words and arguments go waste by ignorance or deeds of days

gone by I have fixed thee for my lover meet and sigh,

when after toiling in the fields to feed the devilish man and labouring on the road

to carry the hump backed to their village near,

thou coming weary taketh rest,in thy ear sweet cadeness of song

I will pour and soft upon thy back would lie,

when the swish of the tuft of thy tail doth brush over me

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment