Personal Blogging

இயற்கை நிறங்கள்

Written by Raja Mahalingam

தோழமைக்கு வணக்கம் ;-

எவ்வளவோ நிறங்கள்

இயற்கையில் இருந்தாலும்,

இந்த #அரக்கு_சிவப்பு என்று

தமிழில் சொல்லக்கூடிய

மெரூன் / செர்ரி ரெட் என்ற

நிறமே என்னை மிகவும் கவர்ந்ந

நிறம் என்றே சொல்லலாம்.

“ஏய் சுஜி, இங்க வந்து

பாரேன் – இந்த தடவையும்

மெரூன் கலர் காட்டனே

உன் பர்த்டேக்கு எடுத்து

வந்திருக்கான் ” –

இது எங்க அம்மாவின்

ஓபனிங் டயலாக்,

அதன்பிறகு அக்கா

அவரது பங்குக்கு –

” இவனுக்கு வேற கலரே

தெரியாதும்மா,

அதுக்கு பதிலாக காசை

என்கிட்ட கொடுத்தா போதும்

நானே வாங்கிக்கிறேன்னு

சொன்னாலும்

கேட்கமாட்டேங்கிறான் ” –

இப்படி தொடர்வது எனது

அக்கா.

” ஹாஹா , எனக்கு அப்பவே

தெரியும், உங்க தம்பிக்கு

இந்த கலர்தான் கண்ணுல படும்

அப்படின்னு,

என் WEDDING DAY – க்கும்

இதே கலர்தானே அண்ணி –

WHY BLOOD – SAME BLOOD “

– இது எனது தர்மபத்தினியின்

குரல்.

———–

இந்த கேலி,கிண்டல்களை எல்லாம்

அனுபவித்தும் கூட,

இந்த #CHERRY_RED மீதான

ஈர்ப்பு தீரவேயில்லை இன்னும்…

சரி, நாம் இங்கே விஷயத்துக்கு

வருவோம்.

வேலை நிமித்தமாக

செம்பொனார்கோயில் சென்ற

வேளையில் கிடைத்த சில நிமிட

இடைவெளியில்,

அந்த ஊரின் பெருமைகளில்

ஒன்றாகிய

ஊர்பெயருக்கு காரணமான

#சுகந்தகுந்தளாம்பிகா சமேத

#சொர்ணபுரீஸ்வரஸ்வாமி

திருக்கோயிலைத் தரிசிக்கச்

சென்றேன்.

புராதனமான அந்த

சிவாலயத்தினுள்ளே

ஸ்தல விருக்ஷங்களாக

வன்னி,வில்வம் இரண்டும்

இருந்தாலும்

திருக்கோயிலின் வெளிச்சுற்றில்

பழங்கள் பழுத்து குலுங்கும்

தொன்மையான பலாமரம்,

வெள்ளெருக்கு,

வன்னி , வில்வம்

ஆகிய மரங்களின் வரிசையில்

அம்பாள் சன்னதி அருகே

காணப்பட்ட இந்த மரம்தான்

– பூத்து குலுங்கியும் ஏகப்பட்ட

இதழ்களை கீழே உதிர்த்தும்

அந்த இடத்தையே

பச்சையும், சிவப்புமாக

மாற்றியிருந்தது.

#நாகலிங்க_பூ ” ;-

ஆஹா,

சிவனையும் சக்தியையும்

எப்படி பிரிக்க முடியாதோ ?

அதேபோல

தமிழையும் சிவனையும் கூட

பிரிக்க முடியாதது தான்.

என்ன அழகான காரணப்பெயர்

இது – நாகலிங்க பூ !

ஒரு சிவலிங்கத்தின் மீது

நாகாபரணம் சார்த்தப்பட்டிருந்தால்

எப்படி இருக்குமோ ! அதே போன்றத் தோற்றத்தில் தான் இதுவும்…

நடுவிலே பூ மொட்டு மலர்ந்து

சிவலிங்கத் தோற்றத்திலும்,

அதனைச் சுற்றி வட்ட வடிவத்தில்

ஆவுடையார் போல

ஐந்து பூவிதழ்களும்,

மேலே சிவலிங்கத்தின்

மீது ஐந்து தலை நாகப்பாம்பு போல

மகரந்த தண்டுகளுமாய்

இந்த மலரே ஒரு சிவனாகவும்

இந்த மரமே ஒரு

ஆயிரம் சிவலிங்கங்களைக்

கொண்ட சிவாலயமாகவும்

நமக்குத் தோன்றும்.

பொதுவாக,

ரோஸ் எனப்படும் வெளிர்சிவப்பு

நிறத்தில் காணப்படும்

இந்த நாகலிங்க மலர்

இந்த கோயில் மரத்தில் மட்டும்

அடர்ந்த சிவப்பாக

CHERRY RED ஆக காணப்பட்டது

வியப்பாகவே இருந்தது எனக்கு.

ஒருவேளை அம்பாள் சன்னதி

அருகில் இருப்பதால்

இந்த அரக்குச் சிவப்பாக

இருக்கிறதோ என்னவோ ?

இறைவியை தொழும் நம்மை

இந்த நிறம் ஈர்த்ததில்

ஒரு வியப்பும் இல்லை போல…

” மலர் போல மலர்கின்ற

மனம் வேண்டும் தாயே !

பலர் போற்றிப் பாராட்டும்

குணம் வேண்டும் தாயே !! “

ரசனையுடன்

#ராஜா_மஹாலிங்கம்

திருக்கோடிக்காவல்.

About the author

Raja Mahalingam

Leave a Comment