Music

சங்கதி மறந்த சங்கீதம்

சங்கதி என்பது ஒன்று கூடுதல் என்ற பொருளில் அடங்கும். சங்கீதத்தில் சங்கதி என்பது மாறுபாடு அதாவது ஒரு ராகத்தில் இருந்து மற்றொரு ராகம் மாறுவதை இசையின் மூலம் காண்பிப்பது. நாம் இப்பொழுது அதற்குள் செல்ல வேண்டாம். இக்கட்டுரையின் மையப்பகுதி சங்கதி மறந்த சங்கீதம். அதை மற்றும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
நான் ஏன் இந்த தலைப்பை வைத்து ஆரம்பித்தேன் என்று நீங்கள் யோசிக்கலாம். பொதுவாகக் கதைகளுக்கு தலைப்பு தேர்ந்தெடுக்கும் பொழுது, நான் தலைப்புகளுக்கே ஓர் கதை எழுதுவது வழக்கம், இம்முறை அதை நான் செய்யவில்லை. மன்னித்து விடுங்கள்.
நேற்றைய முன்தினம் ஓர் செய்தி என் முகநூல் வழியாக உலா வந்தது. விளம்பரம் இது தான் ஓ யெஸ் அருண் அவர்கள் ஏசுவை துதித்து பாட போகிறார் என்பதுத் தான் அந்த செய்தி. செய்தி விரிவடையும் பொழுது மனதில் ஒரு பதற்றம்.இது உண்மையா? இது சரியா? இரண்டிருக்குள் சிக்கித் தவித்தேன்.இந்த வம்பு நமக்கு எதற்கு நம்ம பொழப்பை பாப்போம் என்று விட்டுவிட்டேன். சலனம் மனதில் மீண்டும் வரத் தொடங்கின? மக்கள் நண்பர்கள் முகநூலில் அதைப் பற்றி பேச தொடங்கினர். புரிந்துவிட்டது. இந்த வம்பு முக்கியமான ஒன்று.
உண்மை என்பது புரிந்துவிட்டது, ஆனால் சரியா என்பது புரியவில்லை? தவறு என்பதைப் பற்றி யோசிக்க பயமாகவும் இருந்தது, கொஞ்சம் விட்டு பிடிப்போம் என்று யோசித்தேன்.

About the author

Avatar

thamizhmozhi

Leave a Comment